Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்
தற்போதைய செய்திகள்

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

Share:

ஜோகூர் தேர்தல் களமானது மிகுந்த பரபரப்பிற்குள்ளாகி வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மீண்டும் ஜோகூர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கின்றார்.

கடந்த திங்கட்கிழமை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை அன்வார் அறிவித்த பரபரப்பு அடங்குவதற்குள், இது அவரது இரண்டாவது ஜோகூர் பயணமாகும்.

இன்றைய பயணத்தின் போது, அவர் சிகாமட் தொகுதியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் டத்தாரான் செகாமட் பகுதியில் நடைபெறும் மடானி கித்தா நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அப்பகுதியின் ருகுன் தெத்தாங்கா அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், சமூக ஒற்றுமை, அண்டை வீட்டார் உறவு மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாலை 6.30 மணியளவில், யாயாசான் பஜார் வளாகத்தில் நடைபெறும் ஜோம்! மக்கான் டுரியான் நிகழ்ச்சியிலும் அன்வார் பங்கேற்க உள்ளார்.

உள்ளூர் மக்களுடன் மிகவும் சாதாரணமான மற்றும் நட்புறவான சூழலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், அன்வாருடன், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினரும், துணையமைச்சருமான ஆர். யுனேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.

Related News