Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

Share:

கெடா மாநிலம், ஜாலான் லெபூ கூலிம் டெக்னோ சிட்டி அருகே பேருந்து ஒன்று, சாலையிலிருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் காயமடைந்தார்.

இந்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களும் எந்த வித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது இன்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாம்சுல் சின்ரிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த ஓட்டுநர் கூலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிர்தப்பிய 32 மாணவர்களும் பாதுகாப்பாக கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News