Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி
தற்போதைய செய்திகள்

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

Share:

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், சபா மாநிலத்தின் குடாட் மற்றும் சண்டக்கான் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 5 லட்சம் ரிங்கிட்டை தமது தனிப்பட்ட நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளையான ஒய்.எஸ்.ஐ.ஜேவின் அறங்காவலர் தான் ஸ்ரீ அவின்தர்ஜித் சிங், சபா முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூரிடம் 5 லட்சம் ரிங்கிட் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

ஒய்.எஸ்.ஐ.ஜே மூலம் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியானது, கடந்த ஏப்ரல் மாதம் குடாட் மற்றும் சண்டக்கான் மாவட்டங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்துகளின் புள்ளி விவரங்களின் படி, குடாட் பகுதியில், 8 வீடுகள் தீக்கிரையானதில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும், சண்டக்கான் பகுதியில் 1,050 வீடுகள் தீக்கிரையானதில், 914 குடும்பங்களும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

கொலைகுற்றச்சாட்டு: மூவரை எதிர்வாதம் புரிய உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை