Jul 16, 2026
Thisaigal NewsYouTube
2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு
தற்போதைய செய்திகள்

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

Share:

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஏர் டாக்ஸி மற்றும் ட்ரோன் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கும், எல்.ஏ.இ எனப்படும் குறைந்த உயர வான்வெளி பொருளாதாரத்தில், பிராந்திய அளவில் மலேசியாவை முன்னணி நாடாக உருவாக்குவதற்கும் புதிய திட்டப் பாதையை மலேசியா இன்று அறிமுகப்படுத்தியது.

புத்ரா ஜெயாவில் இன்று தொடங்கிய எல்.ஏ.இ கருத்தரங்கு 2026-இல் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், இந்த முயற்சிக்கு தலைமை வகிக்கும் மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான சி.ஏ.ஏ.எம், தானியங்கி விமானங்கள், மலேசிய வான்வெளியில் பாதுகாப்பாக இயங்குவதற்கு தேவையான முழுமையான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது, வான்வெளி ஒருங்கிணைப்பு, செயல்பாட்டு கண்காணிப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்குவரத்து தீர்வுகளுக்கு தேவையான அடித்தளத்தை உருவாக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சி மலேசியாவின் விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்