Jul 16, 2026
Thisaigal NewsYouTube
பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

பண்டார் சன்வேயில் 20 வயது மாணவி மரணம் - அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர் கைது

Share:

பண்டார் சன்வேயில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில், 20 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கொலை என சந்தேகிக்கப்படுவதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் எம். ஹுசின் ஸொல்லேஹுத்தீன் ஜோல்கிஃப்லி வெளியிட்டுள்ள தகவலில், நேற்று காலை 11.03 மணியளவில், இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வெளிநாட்டு இளைஞர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News