Mar 18, 2026
Thisaigal NewsYouTube
டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்
தற்போதைய செய்திகள்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

Share:

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான் ஸ்ரீ டாமி தாமஸ்சுக்கு எதிராகத் தாம் தொடுத்த 1.9 மில்லியன் ரிங்கிட் சிவில் வழக்கிற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியாக, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த முன்னாள் பிரதமர் தமது வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச் செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, பிப்ரவரி 10 ஆம் தேதி அம்மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கூட்டரசு நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய மூன்று சட்டரீதியான கேள்விகளை நஜிப் எழுப்பியுள்ளார். அதோடு, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டால், ஒரு மாதத்திற்குள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவும் அவர் அனுமதி கோரியுள்ளார்.

மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனு மீதான விசாரணை ஜூலை 30 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நஜீப்பின் வழக்கறிஞர் யுதிஸ்த்ரா தர்மா துரை, பெர்நாமாவிடம் கூறினார்.

ஜனவரி 13 ஆம் தேதி, நீதிபதி டத்தோ ரவிந்திரன் என். பரமகுரு தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது குற்றவியல் வழக்கு இன்னும் தொடங்கப்படாததால், இது தெளிவாக முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டது என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்துடன் உடன்பட்டது.

2022 நவம்பர் 25 ஆம் தேதி, முழுமையான விசாரணை இன்றி நஜிப்பின் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய தாமஸின் மனுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதித்தது.

1MDB வழக்கு தொடர்பாக தம்மை விசாரித்த போது தாமஸ் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டி, நஜிப் , 2021 அக்டோபர் 22 ஆம் தேதி அவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அவ்வழக்கின் மூலம், 1MDB மற்றும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம் (IPIC) தொடர்பான வழக்குகளில் தமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த போது, ​​தாமஸ் தீய நோக்கத்துடன் செயல்பட்டதாக நஜிப் வாதிட்டார்.

இதர சில குற்றச்சாட்டுகளுடன், தாமஸ் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் 1.9 மில்லியன் ரிங்கிட் சிறப்பு இழப்பீடு வேண்டும் என்றும் நஜிப் கோரியுள்ளார்.

Related News