கோலாலம்பூர், டிசம்பர்.31-
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வரும் ஜனவரி 19 முதல் இதற்கான சிறப்பு விண்ணப்பக் காலத்தை உள்துறை அமைச்சு திறந்துள்ளதாக அதன் குடிநுழைவு பிரிவு செயலாளர் Hebat Hisham Mohd Yusoff அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் விண்ணப்பங்கள் 350 விழுக்காடு வரை உயர்ந்ததால் ஏற்பட்ட நெரிசலைத் தவிர்க்கவே, இந்த முறை முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் முதலாளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"ஆதாய நோக்கத்துடன் செயல்படும் இடைத் தரகர்கள் முகவர்கள் ஆகியோரை நம்பி ஏமாற வேண்டாம்" எனத் தெரிவித்துள்ள அவர், முதலாளிகள் நேரடியாகத் தொடர்பு கொண்டால் அமைச்சின் அதிகாரிகளே ஆவணங்களைச் சரிபார்க்க உதவி செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஊதியம், முறையான தங்குமிடம், கறுப்புப் பட்டியலில் இடம் பெறாதது போன்ற நிபந்தனைகளைத் ஆளபலத் துறை மிகத் தீவிரமாகப் பரிசோதித்த பின்னரே அனுமதியளிக்கப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். கடைசி நிமிடம் வரை காத்திருந்து சிக்கல்களை ஏற்படுத்தாமல், இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி விரைவாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தொழில் துறையினருக்கு அரசு தரப்பில் இறுதிக்கெடு விடுக்கப்பட்டுள்ளது.








