இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மார்ச் 19, 20, 28, 29 ஆகிய நான்கு நாட்களுக்குக் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டு 'ஓப்ஸ் ஹரி ராயா' சோதனையைத் தொடங்கியுள்ள சாலைப் போக்குவரத்துத் துறை, அதிவேகம், சமிக்ஞை விளக்கை மீறுதல் உள்ளிட்ட 9 முக்கிய போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், மார்ச் 18 முதல் கருப்புப் பட்டியலில் உள்ள எச்சரிக்கை அபராதங்களை 'MyJPJ' செயலி மூலமே செலுத்தி, தடையை உடனடியாக நீக்கிக்கொள்ளும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


