Aug 26, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் சலோமா மேம்பால மின்தூக்கியில் சிக்கிய 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீட்பு

Share:

கோலாலம்பூர், பிந்தாசன் சலோமா எனப்படும் சலோமா மேம்பாலத்தில் உள்ள மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 6 ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மலேசியப் பொதுத் தற்காப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். நேற்று இரவு பலத்த மழை பெய்துகொண்டிருந்த வேளையில் மின்தூக்கியைப் பயன்படுத்தியபோது இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இரவு 10.05 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்ட மீட்புப் படையினர், அவர்களைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்ததாக கோலாலம்பூர் பொதுத் தற்காப்புப் படை அதிகாரி மேஜர் முகமட் அமினுல்லா சுல்காஃப்ளி தெரிவித்தார்.

Related News