மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டால், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய எரிசக்தி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்து மலேசியா ஆலோசிக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்துள்ளார். பெட்ரோனாஸ் நிறுவனம் தற்போது பல்வேறு அனைத்துலக ஒப்பந்தங்களில் பிணைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதித் தடை என்பது இறுதி நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்றும், தற்போதைய சூழலில் உலகளாவிய வர்த்தகப் பாதைகளின் நிலவரத்தை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று ஆதாரங்களைக் கண்டறிதல், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
மேற்காசியப் போர் நீடித்தால் எரிசக்தி ஏற்றுமதிக்குத் தடை: இறுதி முடிவாக மலேசியா பரிசீலிக்கும்
Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


