கம்பார், ஜாலான் பசார் அவாம்- இல் நேற்று இரவு காவற்படையினரின் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவினரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 வயது சிறுவன், நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளைச் சட்டத்திற்குப் புறம்பாக உருமாற்றம் செய்தது ஆகிய காரணங்களால் ஏற்பட்ட அச்சத்தில், காவற்படையினரின் உத்தரவை மீறி அதிவேகமாகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கம்பார் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார். மாம்பாங் டி அவான் பகுதியைச் சேர்ந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் காவற்படை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


