பஹாவ் சுற்றுவட்டாரக் குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்த 39 வயது வேலையற்ற நபர் ஒருவரை செம்போல் காவற்படை கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டின் வேலி ஏறி குதித்து உள்ளாடைகளைத் திருடியது தொடர்பான புகாரின் அடிப்படையில், தாமான் மசான் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரைப் பிடித்ததாக செம்போல் மாவட்டக் காவற்படைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் நோர்ஹிஷாம் முஸ்தபா தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்ட அந்த நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட உள்ளாடை ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கோலா பிலா மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


