Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இயந்திரப் படகு ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இயந்திரப் படகு ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பெசுட், ஜூன்.30-

திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்து மூவர் உயிரிழந்த வேளையில் ஒன்பது பேர் மூச்சத் திணறலுக்கு ஆளான சம்பத்தில் அந்த படகின் ஓட்டுனரை தடுத்து வைப்பதற்கு போலீசார் மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியை இன்று காலையில் பெற்றனர்.

22 வயதுடைய அந்த நபர், சம்பவத்தின் போது, போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேல் விசாரணைக்கு ஏதுவாக அவரைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டது.

சம்பந்தப்பட்ட படகு ஓட்டுநர், ஏற்கனவே 5 குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்தப் படகின் செல்லத்தக்க உரிமம், கடந்த ஏப்ரல் மாதம் காலாவதியாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →