Jul 18, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

Share:

கோலாலம்பூர், ஜுலை.05-

மலேசியா மற்றும் வங்காள தேட கடப்பிதழ்களை ஆடவர் ஒருவர் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் வைரலான பதிவைத் தொடர்ந்து, அந்நபரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பகாங் மாநில குடிநுழைவுத் துறையும், தேசிய பதிவிலாகாவும் இணைந்து சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அந்நபர், நேற்று ஜூலை 4-ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

குவாந்தானில் உள்ள Jalan Kuantan Bandar Damansara பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கண்டெய்னருக்குள் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதாக அம்மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார்.

Related News