Jul 16, 2026
Thisaigal NewsYouTube
பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரைக் கடிதங்கள் மற்றும் உறவுமுறைகளின் அடிப்படையில் கடன்கள் வழங்கும் வழக்கத்தை பூமிபுத்ரா ஏஜென்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இத்தகைய தோழமைவாத முறைகேடுகளாலும், கடனைத் திருப்பிச் செலுத்தாததாலும் பல பூமிபுத்ரா ஏஜென்சிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதியமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார். வணிகத் தொடக்க நிதியைப் பெறும் சிலர், அதனைத் தொழிலில் முதலீடு செய்யாமல் ஆடம்பரக் கார்கள் மற்றும் அலுவலகங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் சாடினார்.

அரசாங்கம் புதிய பூமிபுத்ரா ஏஜென்சிகளை உருவாக்காது என்றும், மாறாக மாரா, தேக்குன் நேஷனல், எஸ்எம்இ கார்ப்பரேஷன் போன்ற தற்போதைய ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்ட அவர், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்