Jul 18, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

Share:

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் அதிகச் செலவு மற்றும் சிக்கலான செயல்முறைகளைக் கொண்டது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதிகளை அங்கீகரிப்பதில் உள்ள சிக்கல்களால் இந்த அணுகுமுறை உடனடியாகச் செயல்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சின் பொதுச் செயலாளர் ஹஸ்னோல் ஜாம் ஜாம் அகமத் கூறினார்.

தற்போது அரசு சுகாதார நிலையங்களில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ளூர் பயிற்சி நிறுவனங்களின் மூலம் தாதியர்களின் சேர்க்கையை 3,000 இலிருந்து 5,000 ஆக உயர்த்த அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், தனியார் தாதியர் கல்லூரிகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஓய்வு பெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்துவது போன்ற மாற்று வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஹஸ்னோல் ஜாம் தெரிவித்தார்

Related News