கோத்தா பாரு, ஜூலை.05-
கிளந்தானின் பாசிர் பூத்தே பகுதியில் இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த SUV வாகனம் ஒன்று, சாலையோர தொழுகை அறைக்குள் மோதிய விபத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
இன்று காலை 6.35 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 13 வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
Jalan Selising-Bukit Merbau சாலையில் உள்ள SK Bukit Jawa 2 பள்ளி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சறுக்கிச் சென்ற எஸ்யூவி வாகனம் தொழுகை அறைக்குள் மோதியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
6 பேர் பயணம் செய்த அந்த வாகனத்தில் சிக்கியிருந்த இரண்டு பெண்களையும் சிறப்பு மீட்பு உபகரணங்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இருப்பினும், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததால், மேலதிக விசாரணைக்காக அவர்களின் சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.








