Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

Share:

பத்து பஹாட், ஜூலை.05-

பொதுமக்களின் பணத்தை திருடுபவர்கள் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தனது தலைமையிலான அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், தம்மை பதவியில் இருந்து அகற்ற சில அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு Batu Pahat-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அன்வார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிலம், அரசாங்கத் திட்டங்கள், பங்குகள் அல்லது தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதை தனது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று வலியுறுத்தினார்.

மேலும், தூய்மையான நிர்வாகம் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்தும் விரிவான மாற்றங்களை கொண்டு வர, ஜோகூர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்காளர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட, ஜோகூரில் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்த மாநில அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

ஜோகூருக்கு பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, வீடமைப்பு, மக்கள் நலன், உள்கட்டமைப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதை அவர் சுட்டினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலானது வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது

ஹாங்காங்கில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக மலேசிய இளைஞர் கைது