Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரத் திருட்டில் கிரிப்டோகரன்சி சுரங்கம்: 2 பேர் கைது
தற்போதைய செய்திகள்

மின்சாரத் திருட்டில் கிரிப்டோகரன்சி சுரங்கம்: 2 பேர் கைது

Share:

கிள்ளான், ஜூலை.05-

கிள்ளானில் PKFZ எனப்படும் Port Klang Free Zone கிடங்கிலிருந்து மின்சாரத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி கிரிப்டோகரன்சி சுரங்கப் பணியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், Tenaga Nasional Berhad தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் PKFZ துணை போலீசாரின் உதவியுடன் கடந்த ஜூலை 3-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சோதனை நடத்தினர்.

இந்த நடவடிக்கையில் 20 மற்றும் 31 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கிரிப்டோகரன்சி சுரங்கப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News