Jul 10, 2026
Thisaigal NewsYouTube
2028 முதல் ஹவுஸ்மேன்ஷிப் நிறைவு செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் நிரந்தர பணி: சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

2028 முதல் ஹவுஸ்மேன்ஷிப் நிறைவு செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் நிரந்தர பணி: சுகாதார அமைச்சு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.05-

2028-ஆம் ஆண்டு முதல் Housemanship பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அனைத்து மருத்துவ அதிகாரிகளுக்கும் நிரந்தர பணியிடங்கள் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சின் தலைமைச் செயலாளர் Hasnol Zam Zam Ahmad கூறுகையில், ஒப்பந்த மருத்துவர்கள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணவும், நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், இவ்வாண்டில் சுமார் 4,500 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், மீதமுள்ள நியமனங்கள் 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் 800 புதிய மருத்துவ அதிகாரி பணியிடங்களை உருவாக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக Zam Ahmad தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்