கிள்ளான், ஜனவரி.21-
கடந்த வாரம் கிள்ளான், கம்போங் ஜோஹான் செத்தியா பகுதியில் ஆறு வீடுகளுக்குத் தீ வைத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 44 வயதுடைய வேலையற்ற நபர் ஒருவர் இன்று கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
44 வயது ஜெஃப்ரி ஜோஹார் என்ற அந்த நபர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. நீதிபதி Syarifah Hascindie Syed Omar முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மதியம் 2:00 மணி முதல் 2:30 மணிக்குள், கிள்ளான், ஜோஹான் செத்தியா பகுதியில் உள்ள ஆறு குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான வீடுகளுக்குத் தீ வைத்து சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.








