தங்காக், ஆகஸ்ட்.23-
விரைவு பேருந்தும், டிரெய்லர் லோரியும் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 25 பயணிள் பீதியில் மூழ்கினர். இந்த விபத்து இன்று காலை 11.24 மணயளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 152.4 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் தங்காக்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தானியங்கி முறையில் பூட்டிக் கொண்ட பேருந்தின் கதவைத் திறந்து அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தினால் பேருந்தில் இருந்த 25 பயணிகள் பெரும் பதற்றம் அடைந்தனர்.








