ஈப்போ, பிப்ரவரி.12-
கடந்த ஆண்டு பேராக் மாநில தேசிய தின அணிவகுப்பின் போது, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயது Nurhaswani Afni Zorki, தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாதுவின் வழக்கறிஞர் மூலம் இந்த கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. இது பொது நலன் சார்ந்த விஷயம் என்பதால், தற்காப்பு தரப்பும் அரசுத் தரப்பும் இன்னும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
இந்த மனு குறித்த முடிவை அறிவிப்பதற்காக, ஈப்போ நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹாரித் மஸ்லான், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.








