Jun 28, 2026
Thisaigal NewsYouTube
வடக்கு-தெற்கு விரைவுச் சாலை விபத்து: 3 வாகனங்கள் மோதல் - 8 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

வடக்கு-தெற்கு விரைவுச் சாலை விபத்து: 3 வாகனங்கள் மோதல் - 8 பேர் காயம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.28-

சுங்கை பட்டாணி வடக்கு–தெற்கு விரைவுச் சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் 94-ஆவது கிலோமீட்டரில் இன்று காலை ஏற்பட்ட மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக குவார் செம்பெடாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முஹமட் ஹாப்பிஸாம் அப்துல் ரசிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தில் ஒரு லோரியும், பெரோடுவா மைவி மற்றும் டொயோட்டா நோவா என இரு கார்களும் சம்பந்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கிதுடன், சிகிச்சைக்காக அவர்களை சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News