Dec 2, 2025
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட்டில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 பேர் கைது
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட்டில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 பேர் கைது

Share:

கிள்ளான் துறைமுகம், நவம்பர்.05-

மிகக் குறைந்த விலையில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை கோலக்கிள்ளானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத்துறையின் ஒத்துழைப்புடன் தேசிய பதிவு இலாகா மேற்கொண்ட சோதனை மேற்கொண்டது.

அந்த சோதனையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வேலை செய்த 32 அந்நிய நாட்டவர்கள் போலி அடையாள கார்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள், ஒவ்வொருவரும் போலி அடையாள கார்ட்டையும் தலா 100 ரிங்கிட்டிற்கு வாங்கியுள்ளனர். 21 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்த 32 பேரும், தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக போலி அடையாள கார்ட்டை விலைக்கு வாங்கி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று புத்ராஜெயா தேசிய பதிவு இலாகாவைச் சேர்ந்த அமலாக்கத் துணை இயக்குநர் சல்மி கிப்ராவி தெரிவித்தார்.

Related News