Jun 30, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்
தற்போதைய செய்திகள்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

Share:

அண்மையில் பினாங்கு, செபெராங் ஜெயாவில் குழந்தைகள் பராமரிப்பு மையமொன்றில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழந்ததற்கு மூச்சுத் திணறலே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட சவப் பரிசோதனை முடிவுகள் அதனைக் காட்டுவதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அஸீஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும் முன் பல முக்கிய அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக அந்த மையத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதாக அஸீஸி குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 9 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆண் குழந்தை சுயநினைவு இல்லாத நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காது இறுதியில் அக்குழந்தை மரணடைந்தது.

Related News

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு