Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

Share:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்படவிருக்கும் ஒப் செலாமாட் சோதனை நடவடிக்கை நெடுகிலும் நாடு முழுவதும் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ள 25 பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அதே வேளை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள 34 இடங்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

26-வது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஒப் செலாமாட் சோதனை நடவடிக்கை நாளை தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரை நீடிக்கும் என அத்துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமது ஹஸ்புல்லா அலி தெரிவித்தார்.

சீரான போக்குவரத்தை உறுதிச் செய்வதோடு சாலை விபத்துகள், குறிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளைக் குறைப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும்.

சோதனைக் காலகட்டத்தில் 23 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையைக் கண்காணிக்க 5,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வேளையில், வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, வாகனம் ஓட்டும் போது கைபேசிகளை உபயோகிப்பது, அவசரப் பாதையைப் பயன்படுத்துவது, சமிக்ஞை விளக்குகளைப் பின்பற்றாதது, இரட்டைக் கோடுள்ள பாதைகளில் முந்திச் செல்வது, வரிசையில் இடையில் குறுக்கிடுவது போன்ற ஆறு முக்கிய குற்றங்களுக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என முகமது ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.

Related News

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

5 உயிர்களை பறித்த விபத்து: 16 வயது சிறுவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

ருகுன் நெகாரா சர்ச்சை தொடர்பில் டோனி புவா மீதான விசாரணை தொடர்கிறது – உள்துறை அமைச்சர் தகவல்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு