கோலாலம்பூர், அக்டோபர்.23-
பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை நிலை நாட்டுவதற்கு பிரம்படித் தண்டனை முறை மறுபடியும் கொண்டு வரப்பட வேண்டும் என்று என்பது தம்முடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும் கடுமையான நிபந்தனைகள் அடிப்படையில் பிரம்படித் தண்டனை கொண்டு வரப்பட்டால், அது ஆக்கப்பூர்வமான பலனைத் தரும் என்று பிரதமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்பு ஒரு காலக் கட்டத்தில் தாம் ஆசிரியராகப் பணியாற்றிய போது, கட்டொழுங்கை மீறுகின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பிரம்பினால் அடித்த சம்பவத்தை அன்வார் நினைவு கூர்ந்தார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படித் தண்டனை கொடுக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசம் கொண்டுள்ளதா? என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








