May 3, 2026
Thisaigal NewsYouTube
சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்
தற்போதைய செய்திகள்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

Share:

சமய போதகர் சம்ரி வினோத் கை விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது குறித்தும், அதேவேளையில் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி ஏன் அவ்வாறு அழைத்து வரப்படவில்லை என்பது குறித்தும் மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய காலிட் இஸ்மாயில், விசாரணையில் உள்ள இரு குற்றச்சாட்டுகளும் வெவ்வேறானவை என்றும், சிலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களுக்கு அது வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பார்வையில் அவர்கள் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவது போல் தோன்றலாம், ஆனால் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்பவே அவ்வாறு அழைத்து வரப்பட்டார்கள் என்றும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இரு வேறு வழக்குகளில், அருண் துரைசாமி மட்டும் விலங்கிடப்படாத நிலையிலும், தனது கட்சிக்காரர் மட்டும் விலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது குறித்தும், சம்ரி வினோத்தின் வழக்கறிஞர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்த காலிட் இஸ்மாயில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆலய நில சர்ச்சையில் ஈடுபட்டிருந்த அந்த இருவர் மீதும், பொது அவதூறை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, திங்களன்று தனித்தனி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டம் பிரிவு 505(பி)-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்திய சமூகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பினாங்கில் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் சம்ரியும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருப்பதாக காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து:  5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு