Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு
தற்போதைய செய்திகள்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

Share:

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில், முஸ்லிம் மற்றும் இந்து சமுதாயப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியானது ஒரு முதிர்ச்சியான நடவடிக்கை என்று பினாங்கு முஃப்தி சுக்கி உஸ்மான் பாராட்டியுள்ளார்.

மதம் மற்றும் இன மோதல்கள் அதிகரித்து வரும் உலகளாவிய சூழலில், உரையாடல், விவாதம் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மையானது, சமூக முதிர்ச்சியையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பார்வையில், இப்படிப்பட்ட முயற்சிகள் மனித உறவுகளின் அடிப்படை கொள்கைகளான — ஒருவரை ஒருவர் அறிதல், அமைதியாக இணைந்து வாழ்தல் மற்றும் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுதல் போன்றவைகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் சுக்கி உஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புத்ராஜயா சர்வதேச மாநாட்டு மையத்தில், மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமா மற்றும் பல அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொண்ட சிறப்பு கலந்துரையாடல் அமர்வு குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்