கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சை விசாரணைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட முயற்சி இன்று தோல்விக் கண்டது.
தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சை விசாரணைக் குழுவின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் நாடாமன்ற கொறடாவான தக்கியுடின் ஹசான் கொண்டு வந்த தீர்மானம் மக்களவையில் நிரகாரிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய பத்து பூத்தே தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவரின் வயது காரணமாக அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்றும் டத்தோ ஶ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது தொடர்பில் அவரை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சை விசாரணைக் குழுவின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் தனது தீர்மானத்தில் கேட்டுக் கொண்டார்.








