ரொம்பின், டிசம்பர்.03-
காரில் பயணம் செய்த தம்பதியர் திடீரென்று காணாதது குறித்து ஆராயப்பட்ட போது அவர்கள் காருடன் சுங்கை ரொம்பின் ஆற்றில் மூழ்கிக் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தம்பதியரின் கார், சம்பவம் நிகழ்ந்த இடமான கோல ரொம்பின், லெபான் சோண்டோங், கம்போங் ரந்தாவ் பஞ்சாங்கிலிருந்து 60 மீட்டர் தொலைவில் ஆற்றில் அடியில் கிடந்தது.
40 வயது முகமட் ஸைரில் மற்றும் அவரின் மனைவி 55 வயது ஐயிஷா ஷாஃபி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர் என்று ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரிஃப் மொண்டோய் அடையாளம் கூறினார்.
இத்தம்பதியர் பெல்டா கெராத்தோங் 3 ஐ சேர்ந்தவர் என்று அவர் குறிப்பிட்டார்.








