பழுதடைந்த மற்றும் விபத்துக்குள்ளாகும் வாகனங்களை இழுத்துச் செல்வதில் இழுவை லோரி ஓட்டுநர்களுக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 12 ஆடவர்களுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 3 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசான் மரிஸ்கா கலிசான் உத்தரவிட்டார். 19க்கும் 35க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 12 பேரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 1.37 ணிக்கு கோலாலம்பூர், செராஸ், கம்போங் மலேசியா தம்பாஹான், ட்ரினிட்டி அக்குவாத்தா ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதி அருகில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் இந்த 12 பேரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.








