லாபுவான், டிசம்பர்,04-
பயணப் படகு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் இரண்டு சிறார்கள் உட்பட மூவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர். இந்தா சம்பவம் லாபுவான், தஞ்சோங் பத்து கடற்பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.
பயணிகளுடன் அந்த படகு, சபாவிலிருந்து லாபுவானை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நிகழ்ந்த இந்தத் தீச்சம்பவத்தில் படகுப் பணியாளர் ஒருவருக்கு முதுகில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஒன்று மற்றும் இரண்டு வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் தீக்காயங்களுக்கு ஆளாகியதாக லாபுவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹமிஸி ஹாலிம் தெரிவித்தார்.
இச்சம்பவம் நிகழும் போது அந்தப் படகில் மொத்தம் 36 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.








