Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

Share:

உலு லங்காட், டிசம்பர்.04-

இன்று அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளத்தில் சிக்கிய எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள், லோரிகள் மூலம் தேர்வு மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரொன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உலு லங்காட், அப்துல் ஜாலில் மற்றும் Dusun Nanding இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Batu 20, Batu 18, Dusun Tua மற்றும் Batu 14 ஆகிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாக இன்று காலை 6.18 மணிக்கு காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறை அவசர அழைப்பைப் பெற்றதாக ஏசிபி நாஸ்ரொன் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மொத்தம் 85 மாணவர்கள் அரசாங்க ஏஜென்சி மற்றும் தனியார் தரப்பின் ஒத்துழைப்புடன் லோரிகள் மூலம் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News