கோலாலம்பூர், டிசம்பர்.04-
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வர்த்தகர் ஆல்பெர்ட் தே, தம்மைத் தடுத்து வைத்திருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நடவடிக்கையைக் கேள்வி எழுப்பினார்.
எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டில் நுழைந்து தம்மைக் கைது செய்த போது, தாம் ஒரு பயங்கர குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டதாக ஆல்பெர்ட் தே குற்றஞ்சாட்டினார்.
எஸ்பிஆர்எம் அடிக்கடி உச்சரிக்கும் சீரான செயலாக்க நடைமுறையான SOP, தம்முடைய விவகாரத்தில் கடைப்பிடிக்கப்பட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எஸ்பிஆர்எம் பிடியில் இருந்த அந்த 7 நாட்கள், சமூக ஊடகங்களில் நிலவரத்தை அறிய முடியாத அளவிற்கு வெளியில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆல்பெர்ட் தே இதனைத் தெரிவித்தார்.








