Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

Share:

சிப்பாங், டிசம்பர்.04-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கே.எல்.ஐ.ஏ. ஒன்றில் ஏற்பட்ட வெடிகுண்டு புரளியின் பின்னணியில் குற்றத்தன்மையில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

சந்தேகப் பேர்வழியின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக வெறும் எழுத்தில் மட்டுமே அவ்வாறு எழுதப்பட்டிருந்ததாக கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷரியாட் தெரிவித்தார்.

எனினும் பிடிப்பட்ட சந்தேகப் பேர்வழியை செவ்வாய்க்கிழமை தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசியான அந்த சந்தேகப் பேர்வழி பயணப் பெட்டிக்குத் தனது நண்பர் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அத்தகைய வாசகத்தை எழுதியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News