அரசியல், பொருளாதாரம் என்ற அடிப்படையில் நாட்டில் மலாய்க்காரர்கள் வெட்ட வெளிச்சமாக ஏமாற்றப்பட்டு வருவதாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அடி அவாங் கூறியுள்ளார். இந்த நாட்டில் வாழும் மலாய்காரர்களின் நிலைத்தன்மை நிலைக்க வேண்டுமெனில், அனைத்து மலாய்காரர்களும் ஒன்றுப்பட்டு முன்னாள் பிரதமர் மஹதீர் முகமட் தொடங்கி உள்ள் மலாய் பிரகடனத்தில் வந்து இணைந்துக் கொள்ளுமாறு அவர் சூளுரைத்துள்ளார்.
மலாய்காரர்கள் ஊழல், நன்னொழுக்கம் போற்றாமை , அரசியல், பொருளாதாரம் போன்ற விடங்களினால் அங்காங்கு பிரிந்து நிற்கின்றார்கள். கடந்த 15வது பொது தேர்தலின் முடிவுகளினால், பாஸ் கட்சி ஆட்சி அமைக்க இயாலது போனது போன்று மீண்டும் அது நடக்க கூடாது என்பதால் வருகின்ற மாநில பொது தேர்தலில் அனைத்து மலாய்காரகளும் ஒற்றுமையாக இணைந்து மாநிலங்களில் பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மலாய்காரர்களும் மலாய் பிரகடந்த்தில் இணைது கொள்ளுமாறு அடி அவாங் தனது சமூக ஊடங்கங்களின் வழி அறைகூவல் விடுத்துள்ளார்.








