Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
தற்போதைய செய்திகள்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

Share:

10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சமூக ஆர்வலர் அம்ரி சே மாட்டின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பின் அமல்படுத்தலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி வழங்கியது.

அப்பீல் நீதிமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தீர்ப்பாகும் வரை, அந்த இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து அரசாங்கத்திற்கு தற்காலிக விலக்கு வழங்கி நீதித்துறை ஆணையர் சலிதா சைடான் உத்தரவிட்டார்.

முன்னதாக, அம்ரியின் மனைவி நோர்ஹயாத்தி அரிஃபின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர ஆனந்த், இந்த வழக்கு அரசுப் பொதுநிதியைச் சார்ந்தது என்பதால் தீர்ப்பின் அமல்படுத்தலை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தனது வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

என்றாலும், அம்ரி சே மாட் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணை, மேல்முறையீட்டு வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு