Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

Share:

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 60 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேவேளையில், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலரும், ஒரே குடும்பமாகத் திரண்டு வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், டத்தோ சிவகுமார், சிறுவர்களுக்கு உணவுகளைப் பரிமாறியதோடு, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்.

மேலும், சிறுவர்களுக்கு அன்பளிப்புக் கூடைகளும், பெருநாள் பணமான 'துவிட் ராயா' மற்றும் புனித குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அங்கிருந்த குழந்தைகளுடன் அவர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜோகூரைச் சேர்ந்த டத்தோ முகமது அலி, இந்நிகழ்வானது மலேசியாவின் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசு சாரா நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், டத்தோ சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவகுமார், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், இப்தார் நிகழ்வை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில், ஜாதி மத பேதமின்றி ஒருவரையொருவர் நேசித்து ஒற்றுமையாக வாழ்வதே உண்மையான அறம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துகளையும் டத்தோ சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு