May 4, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு
தற்போதைய செய்திகள்

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

Share:

RON95 பெட்ரோலின் தற்போதைய சந்தை விலையானது, மூன்று மடங்கு உயர்ந்திருந்தாலும் கூட, புடி95 மானிய திட்டத்தின் கீழ், அதன் விலையானது லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளாகவே தொடரும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்காக வழங்கப்பட்ட மானியத்தில் எந்தவித மாற்றமும் கொண்டு வர வேண்டாம் என தாம் அமைச்சரவையில் கேட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வார் தெரிவித்துள்ளார்.

PETRONAS நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், வரும் மே மாதம் வரை நாட்டின் பொருளாதார நிலைமையை சமாளிக்க, நமக்கு போதுமான அளவு பெட்ரோலியம் இருப்பு உள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுக்கு நிச்சயமாக இது வேறு மாதிரியான சூழ்நிலையாக அமையும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

Related News