Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

Share:

பேராக் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் உடைக்கப்படாமல் தவிர்க்க, சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இந்து சமயத்தை பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆலயங்கள், மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

மேலும், நிலப்பிரச்சனைகளை எதிர்நோக்கும் சில ஆலயங்களுக்கு மாற்று நிலம் வழங்கப்பட்டும் கூட, ஆலய நிர்வாகம் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும் அ. சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேரா மாநிலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான தமது தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்முடைய அனுமதியின்றி இனி எந்த ஆலயங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என ஊராட்சி மன்றங்களையும், நில அலுவலங்களையும் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அ. சிவநேசன் விவரித்துள்ளார்.

மேலும் ஆலயங்கள் உடைக்கப்படாமல் தவிர்க்க சில ஆலோசனைகளையும் வழங்கினார். அது பற்றி அவர் மேலும் விவரிக்கையில்,

இந்நிலையில், இனியும் அரசாங்க நிலங்களில் அனுமதியின்றி ஆலயங்களை அமைக்கவேண்டாம் என்றும் அ. சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

சொந்த நிலங்களில் ஆலயங்களை எழுப்பவிருந்தால் முதலில் அரசு அனுமதியைப் பெறவேண்டும் என்றும், அந்த வகையில் தெலுக் இந்தானில் தனியார் நிலம் ஒன்றில் ஆலயம் எழுப்ப விண்ணப்பத்திற்கு அனுமதியை மாநில அரசு வழங்கிய தகலையும் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு