Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ECRL ஒருங்கிணைந்த ரயில் முனைய கட்டமானம் தொடக்கி வைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ECRL ஒருங்கிணைந்த ரயில் முனைய கட்டமானம் தொடக்கி வைக்கப்பட்டது

Share:

கிளந்தான், கோத்தா பாருவையும், சிலாங்கூர், கோம்பாக்கையும் இணைக்கும் கிழக்கு கரையோர ரயில்பாதை நிர்மாணிப்பு திட்டமான ECRL- லின் ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் டெர்மினல் நிலையத்தின் கட்டுமானப்பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சிலாங்கூர், கோம்பாக்கில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், மலேசியாவிற்கு வருகைப் புரிந்துள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங்- கும் கலந்து கொண்டனர்.

இந்த பெரும் திட்டத்தில் மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை நிரூபிப்பதற்காக வரலாற்றுப்பூர்மான இந்த நிகழ்வில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

உலகில் மிக நீளமான படிகக்கல் உருவாகும் பகுதியான “Gombak Selangor Quartz Ridge” விளிம்பில் 8.73 ஹெக்டர் நிலப் பரப்பளவில் அமையவிருக்கும் கோம்பாக் ECRL ஒருங்கிணைந்த டெர்மினல் நிலையம், தற்போது உள்ள கோம்பாக் LRT நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கோம்பாக் LRT ரயில் நிலையம் , கிளானா ஜெயா LRT வழித்தடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ள கோம்பாக் ECRL டெர்மினல் நிலையம், வரும் 2026 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது