Sep 23, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்
தற்போதைய செய்திகள்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

Share:

எரிவாயு விநியோக பற்றாக்குறையை சமாளிக்க, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திரவ இயற்கை எரிவாயுவான எல்என்ஜி-ஐ வழங்குமாறு வங்காள தேசம் மலேசியாவிடம் உதவி கோரியுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் நேற்று தொலைபேசி வாயிலாக தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தொலைப்பேசி உரையாடலின் போது, எரிசக்தி, முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மேலும், ஆக்சியாடா நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் எம்எம்சி போர்ட் நிறுவனத்துடன் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிவாயு பற்றாக்குறையும், தொழிற்சாலை விபத்தும் வங்காள தேசத்தின் எரிவாயு நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related News