Aug 16, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

Share:

கோலாலம்பூரின் தாமான் வாஹு பகுதியில் நேற்று அதிகாலை, துப்பாக்கி முனையில் கடை ஊழியரை மிரட்டி 1,052 ரிங்கிட் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் பாஸ்ரி சகொனி வெளியிட்டுள்ள தகவலில், சந்தேகநபர் கடையில் இருந்த உணவுப் பொருட்களை எடுத்த பின்னர், துப்பாக்கியால் மிரட்டி பணப்பெட்டியில் இருந்த பணத்தை பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபர் WC357T என்ற பதிவு எண்ணுடைய மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 397-ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News