உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக துனை அமைச்சர் டத்தோ முஹமாட் யூசோஃப் அப்தால் தெரிவித்தார்.
டிப்ளோமா நிலையில் கடந்த 2022 ஆண்டில் 85 ஆயிரத்து 535 மாணவர்களும் 2021ஆம் ஆண்டில் 58 ஆயிரத்து 424 மாணவர்களும் இணைந்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டார்.
அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் எனப்படும் ஸ்தெம் துறையைப் பொறுத்தவரை, உயர்க்கல்வி அமைச்சு தற்போது கல்வி அமைச்சகத்துடன் ஒத்துழைத்து, அந்தத் துறையில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அமைச்சரவை நிலையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தின் தெரிவித்தார்.
புதிய தலைமுறையினர், குறிப்பாக 1997 இல் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையில் பிறந்த மாணவர்களிடையே திவெட், ஸ்தெம் துறைகளில் ஆர்வத்தை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி என்ன என தேசிய முன்னணியின் ஜெம்போல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷம்சுல்காஹார் முஹமாட் டெலி வினவிய கேள்விக்கு துணை அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.








