Jun 29, 2026
Thisaigal NewsYouTube
டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

Share:

டிக்‌டாக் நேரலை ஒளிபரப்பின் போது மிரட்டல், தூண்டுதல் மற்றும் இனவெறி கருத்துகளை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சமய போதகர் ஜம்ரி வினோத் விசாரணைக்கு உதவ போலீசார் அழைக்க உள்ளனர்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஜம்ரி வினோத் மீது புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அஜீஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த வழக்கானது, 1948 ஆம் ஆண்டு, தேச நிந்தனைச் சட்டம், பிரிவு 4(1), குற்றவியல் சட்டம் பிரிவு 504, 1998 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233(1) ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மார்ச் 7 - ஆம் தேதி ஜம்ரி வினோத் ஓட்டிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏற்பட்ட மிரட்டல் மற்றும் சேதப்படுத்தல் சம்பவம் குறித்து, போலீசார் தயாரித்து வரும் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அஜீஸி இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு