Jun 1, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைனில் வேப் விற்பனை: 4 இணையப்பக்கங்களை முடக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஆன்லைனில் வேப் விற்பனை: 4 இணையப்பக்கங்களை முடக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூன்.01-

2024 ஆம் ஆண்டு பொதுச் சுகாதாரப் புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி, இணையத்தில் வேப் (Vape) பொருட்களை விளம்பரம் செய்து விற்பனை செய்த 4 இணையப்பக்கங்களை முடக்குமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC- க்கு சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

சமூக ஊடக புகார்கள் மூலம் கண்டறியப்பட்ட 10 இணையப்பக்கங்களில் இவை அடங்கும் என்றும், மீதமுள்ள 6 பக்கங்கள் மீது விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட 34,903 அமலாக்கச் சோதனைகளில், விதிமீறல்களுக்காக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 11 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுவர்கள் வரை இந்த வேப் பொருட்களை எளிதாக வாங்குவதாகவும், 'காளான் சுவை' கொண்ட ஆபத்தான வேப் போதையில் சிறுமி ஒருவர் தனக்குத்தானே காயமேற்படுத்திக் கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்தும் இக்கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News