மலேசியாவின் பிரபல வர்த்தகர் லீ கிம் யூவ் திவாலாகிவிட்டதாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் பிரகடன்படுத்தியுள்ளது.
பிரபல கான்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்காட் டின் தோற்றுனரான லீ கிம் யூவ், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் திவாலாகிவிட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னணி நில அடையாளங்களான சிறப்புப் பொருளாதார, தொழிநுட்ப மண்டலமான எம்.எஸ்.சி. சைபர்ஜெயா , செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள பேலஸ் ஓஃப் கோல்டன் ஹார்ஸ் & தெ மைல்ஸ் இன்டர்நேஷனல் எக்ஸ்போ மற்றும் கொன்வென்ஷன் சென்டர் போன்ற முக்கிய கட்டுமானங்களை நிர்மாணித்த பெருமை லீ கிம் யூவையே சேரும்.
இவர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


