Nov 19, 2026
Thisaigal NewsYouTube

அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அஹ்மாட் மஸ்லானின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் பிரதமர் அன்வார் – அரசு நிர்வாகத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

நாடாளுமன்றத்தில் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, துணைப் பொதுப்பணித்துறை அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்த மன்னிப்பை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இருப்பினும், அரசாங்க நிர்வாகத்தில் கண்ணியமும் ஒழுக்கமும் எப்போதும் பேணப்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

அரசியல் பிரசாரங்களின்போது உணர்ச்சிவசப்பட்டு சிலர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடும் என்பதைத் தாம் புரிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட அன்வார், அத்தகைய அணுகுமுறை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இடம் பெறக்கூடாது என்றார்.

அரசாங்கத்தின் முடிவுகளில் கருத்து வேறுபாடு இருந்தால், அதனை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அஹ்மாட் மஸ்லான் நவம்பர் 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, அவரது நடவடிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

எம்சிகேகே பள்ளி மாணவர் மரணம் – முழுமையான விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரிகள், விமானிகள் தொடர்பு – பிரதமர் அன்வார் தகவல்

ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

ஜோர்டான் தூதர் துன் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் – இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலி தாக்குதலில் ஒருவர் பலி – அச்சத்தில் கிராம மக்கள்; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்

நஜிப் ரசாக்கின் இல்லம் தொடர்ந்து குடியிருப்பு மண்டலத்திலேயே நீடிக்கிறது – வீடமைப்பு அமைச்சு விளக்கம்

தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்

தம்புனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் – ஆயுதக் கொள்ளைக் கும்பலின் தலைவன் எனச் சந்தேகம்; 17 குற்றப் பதிவுகள்